News August 8, 2025

டிரம்ப்புக்கு ஷாக் கொடுத்த இந்தியா

image

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக இந்தியாவும் ஆக்‌ஷனில் இறங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து P-8I ஜெட் விமானங்கள் வாங்கும் $3.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஜெட் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலிருந்து செல்லும் நிலையில், டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால், அவற்றின் விலையும் 50% உயர்ந்துள்ளது. இதனால் ஜெட் விலையும் உயர்வதால் ஆர்டரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Similar News

News August 8, 2025

₹3,500 கோடி ஊழல்.. விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா

image

ஆந்திராவில் <<17336265>>₹3,500 கோடி மதுபான ஊழல்<<>> வழக்கில் நடிகை தமன்னாவை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில் சிக்கிய வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா இருக்கும் போட்டோக்கள் வைரலாகின்றன. தங்க நகை வியாபாரம் செய்து வரும் தமன்னா, தான்சானியாவில் வெங்கடேஷ் உடன் தங்க சுரங்கம் வாங்க பிளான் செய்ததாக கூறப்படுகிறது. திரையுலகில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைகிறதாம்.

News August 8, 2025

டிரம்ப்புக்கு செக்.. ரஷ்யாவை நெருங்கும் இந்தியா

image

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1947 முதல் ரஷ்யாவுடன் நெருக்கத்தை பேணிய இந்தியா, 90-களுக்கு பிறகு அமெரிக்காவுடன் கைகோர்த்தது. ரஷ்யாவுடன் முழுவதுமாக உறவை துண்டித்தால், அது சீனா-ரஷ்யா உறவை வலுப்படுத்தி, ஆசிய பிராந்தியத்தில் தனக்கு பாதகமாக முடியும் என இந்தியா கருதுகிறது. இனி டெல்லியின் பார்வை மாஸ்கோவை நோக்கி திரும்பலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

News August 8, 2025

மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தில் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் சிலர் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு எண், பேங்க் அக்கவுண்ட் எண், IFSC Code, ஆதார் எண் உள்ளிட்டவற்றை சரியாக பூர்த்தி செய்து, அதற்கான அசல் சான்றிதழ்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் சிலர் தவறு செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசு, முறையாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!