News October 24, 2024
வெறும் 1 ரன்னில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, 2ஆவது டெஸ்ட்டில் எழுச்சி பெறும் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. முதல் இன்னிங்சை தொடங்கிய IND வெறும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தது. அதுவும் கேப்டன் ரோகித் விக்கெட். 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் முட்டை ரன்னில் வெளியேறினார். 15 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 1 ரன்னுடன் களத்தில் இருக்கிறார்.
Similar News
News January 15, 2026
பொங்கல் பணம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

₹3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு நேற்று வரை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 7,80,764 பேர் பொங்கல் தொகுப்பை பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் 95% பேர் மட்டுமே பொங்கல் தொகுப்பை வாங்கியுள்ளனர். பொங்கல் பரிசு தேர்தலில் எதிரொலிக்கும் என நினைத்திருந்த திமுகவுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.


