News September 27, 2025
சூப்பர் ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் டார்கெட்

இந்தியா – இலங்கை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் பந்திலேயே நிசங்காவின் விக்கெட்டை பறிகொடுத்தது. 5-வது பந்தில் 2 வது விக்கெட்டையும் இலங்கை இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை. சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.
Similar News
News January 21, 2026
புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.
News January 21, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $106.00 உயர்ந்து $4,784.53-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $0.75 உயர்ந்து $95.33 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.21) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
இன்று மாலை தவெக பிரசாரக் குழு கூட்டம்

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


