News March 27, 2025
USA புகாருக்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு, மத சுதந்திரம் மீறப்படுகிறது எனும் USA ஆணையத்தின் (USCIRF) குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு தரப்பு சார்புடைய, அரசியல் உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு எனவும், தனித்தனி நிகழ்வுகளை தவறாக சித்தரித்து, இந்தியாவின் துடிப்பான பன்முக கலாச்சாரத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி என்றும் கண்டித்துள்ளது.
Similar News
News November 21, 2025
தருமபுரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள் இங்கு <
News November 21, 2025
ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.


