News December 18, 2024
வடகொரியாவுடன் உறவை புதுப்பித்த இந்தியா

நீண்ட இடைவெளிக்குப் பின் வடகொரியா உடனான தூதரக உறவை இந்தியா தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அணு ஆயுதம், அதி நவீன ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இத்தகைய டெக்னாலஜிகள் பாக். செல்வதை தடுக்க, இந்தியா வேலையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 6, 2025
OFFICIAL: ‘மதராஸி’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

SK நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ₹12.8 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், உலகளவில் ₹18 கோடி வரை வசூலித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அவரது முந்தைய படமாக ‘அமரன்’ செய்த சாதனையை இப்படம் முறியடிக்கவில்லை. ‘அமரன்’ படம் முதல் நாளில் ₹42.3 கோடி வசூலானது. நீங்க ‘மதராஸி’ பார்த்தாச்சா?
News September 6, 2025
இந்திய ஏ அணி அறிவிப்பு.. கேப்டனான ஸ்ரேயஸ்!

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான, 2 Multi-Day போட்டிகளுக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. SQUAD: ஸ்ரேயஸ் (C), அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் (WK), சாய் சுதர்சன், ஜுரெல் (VC & WK), படிக்கல், நிதிஷ்குமார், தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாகூர். ராகுல், சிராஜ் 2-ஆவது போட்டியில் இணைவர். வரும் 16, 23-ம் தேதிகளில் லக்னோவில் போட்டிகள் நடைபெற உள்ளன.
News September 6, 2025
விஜய் பேச அனுமதி மறுப்பு?

செப்.13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை செய்ய உள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி கோரிய நிலையில், விஜய் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கவுரைக்காக திருச்சியில் தவெக தரப்பில் கேட்கப்பட்ட இடங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லையாம்.