News September 15, 2024
தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 4ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. செர்பியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும், டிராவுக்கு தலா ஒரு புள்ளிகளும் வழங்கப்படும்.
Similar News
News October 26, 2025
KKR அணிக்கு அபிஷேக் நாயர் பயிற்சியாளர்

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.
News October 26, 2025
அதிகம் காலடி படாத சுற்றுலா தளங்கள்

ரம்மியமான இயற்கை சூழலை கொண்ட ஏராளமான இடங்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இங்கு அதிகளவிலான மக்கள் செல்வதில்லை. ஆனால், இந்த இடங்களுக்கு கட்டாயம் ஒருமுறை செல்ல வேண்டும். இங்கு உள்ள இயற்கை சூழல் நம்மை பிரமிக்க வைக்கும். அது எந்தெந்த இடங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 26, 2025
வாகன ஓட்டிகளுக்கு HAPPY NEWS

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் பைக், ஸ்கூட்டர் அனைத்திலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ABS) கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ABS அம்சம் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.


