News October 3, 2024
அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு

இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஆணையம் (USCIRF) குற்றஞ்சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, USCIRF அரசியல் நோக்கம் கொண்ட ஒருசார்பு அமைப்பு என விமர்சித்துள்ளது. மேலும், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவைப் பற்றி தவறாக சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி இது எனவும் குறை கூறியுள்ளது.
Similar News
News August 27, 2025
ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் தமிழகம்!

ட்ரம்பின் வரிவிதிப்பை கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. வரி விதிப்பால் பல உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போரைக் கண்டித்தும், ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
News August 27, 2025
அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.