News May 22, 2024
சுற்றுலா வளர்ச்சிப் பட்டியலில் இந்தியாவுக்கு 39ஆவது இடம்

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) நாடுகளுக்கு இடையிலான பயணம் & சுற்றுலா வளர்ச்சிப் பட்டியலில் 39ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை WEF சார்பில் உலகளவில் சுற்றுலா வளர்ச்சி சார்ந்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2024 ஆண்டுக்கான பட்டியலில், செலவின குறியீட்டில் 18ஆவது இடமும், விமானப் போக்குவரத்தில் 26ஆவது இடமும் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பில் 25ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
Similar News
News November 20, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

முட்டை கொள்முதல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இன்று 5 காசுகள் அதிகரித்த நிலையில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோழித்தீவன மூலப் பொருள்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உங்க பகுதியில் விலை என்ன?
News November 20, 2025
CBSE பள்ளிகளுக்கு பறந்தது எச்சரிக்கை

CBSE 10, +2 மாணவர்களுக்கான பிராக்டிக்கல் தேர்வுகள், புராஜெக்ட் அசெஸ்மெண்ட் முடிந்தவுடன் மதிப்பெண்களை இணையதளத்தில் கவனமுடன் பதிவேற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிழைகள் இல்லாமல் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என்றும், பிழைகளை திருத்துவதற்குப் பின்னர் சாக்குப்போக்கு சொல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஜன.1 முதல் பிப்.14 வரை பிராக்டிக்கல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
News November 20, 2025
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: TN அரசு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை HC-ல் பதிலளித்துள்ளது. ஏற்கெனவே, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, டிசம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


