News March 10, 2025

ஆயுத இறக்குமதி.. உலகிலேயே இந்தியா 2ஆவது இடம்

image

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா (8.3%) 2ஆவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (8.8%), 3-5 இடங்களில் கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இருப்பதாக SIPRI கூறியுள்ளது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த நிலை மாறி, USA, பிரான்ஸ், இஸ்ரேலிடம் தற்போது இந்தியா அதிக ஆயுதம் வாங்கி உள்ளதாகவும் SIPRI குறிப்பிட்டுள்ளது.

Similar News

News March 11, 2025

ஒடிசா: 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்

image

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக CM மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 11, 2025

கே.எல்.ராகுல் vs அக்சர்: DC கேப்டன் யார்?

image

IPL விரைவில் துவங்க உள்ள நிலையில், DC கேப்டனை வரும் நாள்களில் அந்த அணி அறிவிக்க உள்ளது. இந்த ரேஸில் அக்சர் படேலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இதில், DCக்காக 7 சீசன்கள் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் அக்சரின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன்சியில் அனுபவம் இல்லாத காரணத்தால் LSG, பஞ்சாப் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட, முதல்முறையாக DCக்காக விளையாட உள்ள ராகுலின் பெயரும் அடிபடுகிறது.

News March 11, 2025

நாக்பூரில் இருந்து வரலாறு எழுதப்படாது: கனிமொழி

image

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என பாஜக MP நிஷிகாந்த் துபே கூறியதை சுட்டிக்காட்டி, வரலாறு நாக்பூரில் எழுதப்படவில்லை என கனிமொழி சாடியுள்ளார். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் செழித்து வளரும் மொழி எனவும், சமஸ்கிருதம் போல் பாஜகவின் பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மொழி அல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் பொய்களை விடவும் தமிழ் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!