News June 29, 2024
முதலிடம் பிடித்த இந்தியா

2023-24 நிதியாண்டில் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு இந்தாண்டு ₹10 லட்சம் கோடியை அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 7.5% வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
பும்ரா இல்லை.. இது தான் இந்தியாவின் பிளேயிங் 11

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ரா, வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியின் இந்திய பிளேயிங் 11 விவரம் : சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ராணா, அர்ஷ்தீப் சிங். இது இந்திய அணிக்கு 250-வது டி20 போட்டியாகும்.
News September 19, 2025
விஜய் பரப்புரையில் மின்தடை ஏற்படாது!

நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, திருவாரூரில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ஒத்திவைப்பதாகவும் நாளை தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த முறை அரியலூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 19, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பையில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், இது சம்பிரதாய மோதலாகவே பார்க்கப்படுகிறது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களம் காணுகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்களாக பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா, வருணுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.