News October 16, 2025
வான் பாதுகாப்பில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் அதிரடி காட்டிய இந்திய விமானப்படை வான் பாதுகாப்பில் 3-வது இடத்தில் உள்ளது. WDMMA தரவுகளின்படி, USA முதலிடத்திலும், ரஷ்யா 2-ம் இடத்திலும், அண்டை நாடான சீனா 4-வது இடத்திலும் உள்ளது. அதேநேரம், முதல் 10 இடங்களில் பாக்., இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் விமானப்படையில் உள்ள வீரர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 16, 2025
பணம், நோபல் பரிசுக்காக டிரம்ப் இப்படி செய்யலாமா?

பல ஆண்டுகளாக இந்தியா- USA இடையில் இருந்த வலுவான நல்லுறவை டிரம்ப் சீர்குலைத்ததாக வெள்ளை மாளிகை ex தலைமை அதிகாரி ரேம் இமானுவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு 50% வரி, ஆபரேஷன் சிந்தூரின்போது தானே மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தெரிவித்தது விரிசலை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், நோபல் பரிசு ஆசைக்காகவும், பாக்., பணத்துக்காகவும் டிரம்ப் இப்படி செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 16, 2025
நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: IMD

வரும் 24-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என RMC தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளார். நாளை விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
News October 16, 2025
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்த 10, +12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. SHARE IT.