News June 1, 2024

INDIA NEWS: பாஜக 371 வெல்லும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 371 இடங்களை வெல்லும் என்று இந்தியா நியூஸ் நிறுவனம் கணித்துள்ளது. அவர்களும் D-Dynamics நிறுவனமும் சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 125 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற கட்சிகள் 47 இடங்களை வெல்லக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 19, 2025

ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

image

ஆசிய கோப்பையில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், இது சம்பிரதாய மோதலாகவே பார்க்கப்படுகிறது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களம் காணுகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்களாக பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா, வருணுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News September 19, 2025

சூரிய கிரகணத்தில் தம்பதியர் ஒன்று சேரலாமா?

image

நாளை மறுநாள் (செப்.21) இரவு 10.59 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சமயத்தில் பல விஷயங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, தம்பதியர் உறவில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

News September 19, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் இந்திய இணை கலக்கல்

image

*சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக், சிராஜ் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *இந்தியா A – ஆஸி. A அணிகள் இடையிலான அன் அஃபிசியல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. *உலக தடகள சாம்பியன்ஷிப், 5000 மீ ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 0.19 விநாடிகள் தாமதமாக வந்ததால் இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டார். * உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்னு ராணி ஏமாற்றம்.

error: Content is protected !!