News March 2, 2025
7 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த இந்தியா!

கில் 2 ரன்னில் LBW ஆக, கேப்டன் ரோஹித் 15(17) ரன்னில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். நிலைத்து நின்று ஆடுவார் என நினைத்த கோலி, 11(14) ரன்னில் பிலிப்ஸின் அசத்தலான கேட்ச் மூலம் அவுட்டாகினர். 7 ஓவர்களில், இந்திய அணி 30/3 ரன்களில் தடுமாறி வருகிறது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் களத்தில் இருக்கின்றனர். மீளுமா இந்தியா?
Similar News
News March 17, 2026
ஆதவ் அர்ஜுனா பேச்சு அரசியல் நாகரிகமற்றது: EPS

ரஜினியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என EPS கூறியுள்ளார். X தளத்தில் இதுகுறித்த தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அரசியலுக்கு வராத காரணத்தை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்ட போதிலும், அதை அரசியல் நோக்கத்தோடு அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என EPS கண்டித்துள்ளார்.
News March 17, 2026
தமிழக தேர்தல்.. புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் உதவி எண்களை ECI அறிவித்துள்ளது. 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் ‘Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு வாக்காளர்கள் தீர்வை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1800-11-1950 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE THIS
News March 17, 2026
கொடூரம்.. சிறுமியை ரேப் செய்த 3 சிறுவர்கள்

டெல்லியில் 8 வயது சிறுமியை 12- 13 வயதுடைய 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, 3 சிறுவர்கள் சிறார் நீதிச் சட்டப்படி காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வன்கொடுமையில் ஈடுபடுவது குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.


