News October 23, 2024

4ஆவது அரக்கனை கடலில் இறக்கியது இந்தியா

image

4ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா கடலில் இறக்கியுள்ளது. எஸ்.4 எனப்படும் அந்த நீர்மூழ்கி, பாலிஸ்டிக் ஏவுகணையை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. ஏற்கெனவே இந்தியா 3 அணுசக்தி நீர்மூழ்கிகளை பயன்பாட்டுக்கு காெண்டு வந்துள்ளது. அதில் முதல் 2 நீர்மூழ்கி கப்பல்கள் பணியில் உள்ளன. 3ஆவது நீர்மூழ்கி தற்போது பரிசோதனையில் உள்ளது. விரைவில் அதுவும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

Similar News

News January 20, 2026

உடல் எடையை குறைக்க யூடியூப் டிப்ஸ்.. மாணவி உயிரிழப்பு

image

மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து, உடல் எடையை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி நாட்டு மருந்து சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் 18-ம் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட, ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 20, தை 6 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News January 20, 2026

சாய்னா நேவால் ஓய்வு!

image

நீண்டகால முழங்கால் பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த சாய்னா நேவால், தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார். இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் போட்டியில் ஒரு போட்டி ஆட்டத்தில் விளையாடிய சாய்னா, ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தம் 24 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.

error: Content is protected !!