News May 17, 2024
இந்தியாவே தேர்தல் முடிவை திரும்பி பார்க்கும்

ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களில் YSRCP வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என்ற அவர், கடவுள் அருளால் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார். ஆந்திராவில் 25 மக்களவை மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
Similar News
News December 20, 2025
100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

டெல்லியில் நிலவி வரும் கடும் மூடுபனியை தொடர்ந்து, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் இன்று மட்டும் 129 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களுக்கும், ஆரஞ்சு அலர்ட் தொடரும் என IMD எச்சரித்துள்ள நிலையில், விமான சேவைகள் குறித்து முன்னரே உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 20, 2025
BREAKING: தமாகாவுடன் இணைந்த காமக

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி இணைந்துள்ளது. தமிழருவி மணியன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தார். இதன்பின் பேசிய ஜி.கே.வாசன், தமாகாவுடன் காமக ஒன்றாக இணைந்ததால், எதிர்காலம் அரசியல் களத்திற்கு வசந்த காலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள்; இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என்றார்.
News December 20, 2025
தவெக உடன் கூட்டணி அமைக்க காங்., விருப்பம்: நாஞ்சில்

காங்கிரஸை போல சில கட்சிகளுக்கு தவெகவுடன் கூட்டணி சேர ஆசை இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவர், யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க விஜய் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணி பலமாக இருப்பதாக திமுக கூறிவரும் சூழலில், காங்கிரசுக்கு இப்படியொரு ஆசை இருப்பதாக நாஞ்சில் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


