News November 23, 2024
இந்தியாவே உற்றுப் பார்க்கும் பிரியங்கா காந்தி!

வயநாடு எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மகுடம் சூடுவாரா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ரிசைன் செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை பிரியங்கா களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
Similar News
News September 18, 2025
இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
News September 18, 2025
இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
News September 18, 2025
யார் இந்த மருது அழகுராஜ்?

1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்த அவர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ‘நமது எம்ஜிஆர்’ என்ற அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், OPS-ன் தீவிர ஆதரவாளராக மாறினார். ஜெ.,வின் பல அரசியல் உரைகளையும் எழுதியுள்ளார். திருப்பத்தூரில் தேமுதிக (2006), அதிமுக (2021) சார்பில் போட்டியிட்டிருந்தார்.