News April 25, 2025

இந்தியாதான் டார்கெட்.. ஆப்பிள் எடுத்த முடிவு

image

2026 இறுதிக்குள் அமெரிக்காவிற்கு தேவையான அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 6 கோடி ஐபோன்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஐபோன் உற்பத்திக்கு சீனாவையே நம்பி இருப்பதை குறைக்கவும், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை கருத்தில் கொண்டும் இம்முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

Similar News

News April 26, 2025

சூப்பர் காம்போ.. ரீ-என்ட்ரி கொடுக்கிறார் அப்பாஸ்!

image

நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான அவர், கடைசியாக 2015-ல் பச்சகள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் அவர் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் அதில் நடிக்கவுள்ளனராம். அப்பாஸ் நடித்ததில் உங்க ஃபேவரெட் படம் எது?

News April 26, 2025

சேப்பாக்கத்தில் இதுவே முதல்முறை.. SRH சாதனை

image

சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக CSK அணியை வீழ்த்தி சோக வரலாற்றுக்கு SRH முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2024-ம் ஆண்டுவரை சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் SRH அணி தோல்வியையே தழுவி இருந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு SRH அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி CSK அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் CSK-வை வீழ்த்தி அந்த வரலாற்றை SRH மாற்றி இருக்கிறது.

News April 26, 2025

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும்: பாக். Ex அமைச்சர்

image

சிந்து நதி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நம்முடையது. நமக்கான நீர் இந்த நதியில் பாயும். இல்லையென்றால், அவர்களின் (இந்தியர்கள்) ரத்தம் பாயும்’ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!