News December 14, 2024
சிறுபான்மையினரை காக்கும் நாடு இந்தியா தான்: ரிஜிஜு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து சிலரால் கட்டமைக்கப் படுவதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மியான்மர், வங்கதேசம், பாக்., ஆப்கன் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையோ, ஏதேனும் பிரச்னையோ எழுந்தால், அவர்கள் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியாதான். ஜனநாயகத்தில் இந்தியாவுடன் யாராலும் போட்டியிட முடியாது என்றார்.
Similar News
News March 16, 2026
BREAKING: தேர்தல் பணம்.. CEO புதிய அறிவிப்பு

தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும், சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால், பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் உடனடியாக திருப்பி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக ஆன்லைனில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 16, 2026
அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும்: உதயநிதி

நம்மிடம் கார் இல்லையென்றால், காரை புக் செய்து செல்வோம்; அதேபோன்று அதிமுகவை புக் செய்து பாஜக பயன்படுத்துகிறது என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமாரை CM பதவியிலிருந்து பாஜக ஓரம்கட்டிவிட்டது; அவருக்கே இந்த நிலை என்றால், ஊர்ந்து சென்ற EPS-யும் ஊதித்தள்ளிவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் எனவும் சாடியுள்ளார்.
News March 16, 2026
திமுக மா.செ.,க்கள் கூட்டம் தொடங்கியது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்தல் பணி, கூட்டணி தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


