News February 2, 2025
உலகின் 4-வது வலிமையான நாடு இந்தியா

உலக நாடுகளில், ராணுவ வலிமையில் இந்தியா 4-வது வலிமைமிக்க நாடாக இடம்பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடம், ரஷ்யா 2-ம் இடம், சீனா 3-ம் இடத்தில் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 9-வது இடத்திலிருந்து 12-வது இடத்துக்கு சென்றுவிட்டது. ஆள்-ஆயுத பலம், பாதுகாப்பு டெக்னாலஜி, நிதி வளம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட 60 காரணிகள் அடிப்படையில் இந்த Global Firepower Index வெளியிடப்படுகிறது.
Similar News
News March 2, 2026
சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
News March 2, 2026
3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.
News March 2, 2026
பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் நாளை (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT.


