News October 21, 2025

பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியா காரணம்

image

இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம்பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News October 21, 2025

அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

image

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.

News October 21, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News October 21, 2025

வீட்டில் நல்லதே நடக்க இதை செய்யுங்க..

image

வீட்டில் நன்மை பெருகவும், தீமை ஒழியவும் படிகார கல் போதுமானது என்று நம்பப்படுகிறது. தொழில் வளர்ச்சி முதல் குழந்தைகளின் கல்வி வரை பலவற்றுக்கும், இந்த படிகார கற்களை வேத காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!