News August 22, 2025
உக்ரைன் போரை இந்தியா நிரந்தரமாக்குகிறது: USA

50% வரி விதித்தபோதிலும் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தக உறவை இந்தியா தொடர்கிறது. இதனால், இந்தியா உக்ரைன் மீதான போரை நிரந்தரமாக்குவதாக வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ காட்டமாக தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யை வாங்கி, உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடுப்பதற்கான நிதியை இந்தியா வழங்குவதாகவும் அவர் சாடியுள்ளார். இந்தியா, ஒரு லாப நோக்கத்துடனான சலவை இயந்திரமாக செயல்படுகிறது என்றார்.
Similar News
News August 22, 2025
கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 22, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 22, 2025
BREAKING: இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2023-ல் லண்டனுக்கு அரசுமுறை பயணமாக சென்றபோது இந்திய மதிப்பில், அரசு பணம் சுமார் ₹13,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.