News March 27, 2025
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது: அமித்ஷா

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, இன்று லோக்சபாவில் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வருபவர்களை திறந்த மனதுடன் எப்போதும் வரவேற்போம் எனவும், ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல எனவும் கூறினார்.
Similar News
News December 21, 2025
7 வயது சிறுமியை வீட்டோடு தீ வைத்து எரித்த கொடூரம்!

கலவர பூமியாக மாறியுள்ள வங்கதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நெஞ்சை உலுக்குகிறது. லக்ஷ்மிபூர் பகுதியிலுள்ள BNP (பங்களாதேஷ் தேசியக்கட்சி) தலைவர் ஒருவரின் வீட்டை வெளிப்புறமாக பூட்டிய போராட்டக்காரர்கள், தீ வைத்துள்ளனர். இதில், பெரியவர்கள் தீக்காயங்களுடன் தப்பித்து விட்ட நிலையில், ஆயிஷா அக்தர் என்ற 7 வயது சிறுமி துடிதுடித்து மரணமடைந்துள்ளார். தீ விபத்தில் மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
News December 21, 2025
போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் செந்தில் பாலாஜி

2026-ல் கரூருக்கு பதில் கோவையில் போட்டியிட இருப்பதாக வெளியான செய்திக்கு, செந்தில் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கரூர் மக்கள் என்மீது வைத்துள்ள அன்பால், போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் வெற்றிபெற வைத்துள்ளனர். கரூர் தொகுதி எனக்கு சாதகமாகவே உள்ளது. அதனால், கோவையில் போட்டியிடுவேனா என்ற சந்தேகங்கள் வேண்டாம் என்றும், இந்த முறையும் கரூர் தொகுதியில்தான் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
கில்லிடம் சொல்லாமலேயே BCCI அவரை நீக்கியதா?

2026 டி20 WC தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பெறாததற்கு ‘form out’ காரணமில்லை என அகர்கர் கூறியிருந்தார். ஆனால், போதிய ரன்கள் எடுக்காததால் கில்லை சேர்க்கக்கூடாது என்ற முடிவில் பிசிசிஐ ஏற்கெனவே இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே அகமதாபாத் டி20-யிலும் அவர் நீக்கப்பட்டார் என பேசப்படுகிறது. அத்துடன், கில்லிடம் சொல்லாமலேயே டி20 WC அணியிலிருந்து BCCI அவரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


