News August 3, 2024
உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்திற்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில், நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 30, 2025
கேரளாவில் தொடங்கிய SIR

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


