News October 10, 2024
விண்வெளி ஆராய்ச்சியில் அசத்தும் இந்தியா!

விண்வெளி ஆய்வுக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட (MACE) தொலை நோக்கியை லடாக்கில் இந்தியா நிர்மாணித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இது, உலகின் உயரமான தொலைநோக்கியாகும். காமா கதிர்கள், நட்சத்திர வெடிப்புகள், கருந்துளை குறித்த ஆராய்ச்சிகளுக்கு இதன் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது புதிய மைல் கல்லாகும்.
Similar News
News December 10, 2025
டிசம்பர் 10: வரலாற்றில் இன்று

*மனித உரிமைகள் நாள். *1768 – முதலாவது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. *1878 – முன்னாள் CM ராஜாஜி பிறந்தநாள். *1896 – நோபல் பரிசை தோற்றுவித்த ஆல்பிரட் நோபல் உயிரிழந்த நாள். *1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. *1964 – நடிகர் ஜெயராம் பிறந்தநாள். *2016 – கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி உயிரிழந்த நாள்.
News December 10, 2025
மெகுல் சோக்சியை நாடு கடத்த கோர்ட் க்ரீன் சிக்னல்

PNB வங்கியில் ₹13,000 மோசடி செய்துவிட்டு பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு, அந்நாட்டு SC சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்ற கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த SC, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால், அவரை நாடு கடத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
News December 10, 2025
₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.


