News April 7, 2024
பொருளாதாரத்தில் பிரிட்டனை விஞ்சி விட்டது இந்தியா

பொருளாதார பலத்தில் பிரிட்டனையே இந்தியா விஞ்சி விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். அரியலூர் கூட்டத்தில் பேசிய அவர், 200 ஆண்டுகாலம் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டனை பொருளாதார பலத்தில் இந்தியா தோற்கடித்து விட்டதென்றார். உலக அளவில் பொருளாதார பலத்தில் தற்போது 5ஆவது இடத்திலுள்ள இந்தியா, மோடி 3வது முறையாக பிரதமரானதும் 3வது இடத்துக்கு வருமென்றும் அவர் கூறினார்.
Similar News
News February 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 2, 2026
குழந்தைகளுடன் பேசுங்கள்

பெற்றோர் – குழந்தைகள் இடையே இணக்கமான உறவு இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை பல பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
News February 2, 2026
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

WPL 2026 தொடரின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி யுபி வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த யுபி, 122/8 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி, குஜராத் அணியை எதிர்கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணி பைனலில் ஆர்சிபியை எதிர்கொள்ளும்.


