News April 2, 2024
இந்தியா இதுவரை கச்சத்தீவை திருப்பி கேட்கவில்லை

கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று திட்டவட்டமாக கூறிய அவர், இந்தியா கச்சத்தீவை திருப்பிக் கேட்டால் இலங்கை தக்க பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார். கச்சத்தீவை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அண்ணாமலை கூறிய நிலையில், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.
News October 31, 2025
அதிகமாக மது அருந்துபவர்கள் இந்த மாநிலத்தவர்கள் தான்!

நாட்டின் சாபகேடாக மது மாறிவிட்டாலும், விற்பனை எப்போதும் அமோகம்தான். 2024 – 2025-ல் அதிகமாக மது அருந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை Case-களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு Case = 12 மது பாட்டில்கள்) அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோஸை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். லிஸ்ட்டில் டாப்பில் நீங்க எதிர்பார்த்த மாநிலம் எது?
News October 31, 2025
இந்தியா- ஆஸ்திரேலியா T20-யில் மழை குறுக்கிடுமா?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி இன்று மெல்போர்னில் மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், போட்டி தொடங்கும் நேரத்தில், மழை பொழிவதற்கு 66% வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் T20 மழையால் ரத்தாகியது போலவே, இந்த போட்டியையும் மழை கெடுத்துவிடுமோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


