News February 23, 2025
மோசமான சாதனையை படைத்த இந்தியா!!

ODIல் இந்திய அணி, தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்று, தொடர்ச்சியாக அதிக முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. 2023 உலகக்கோப்பையில் தொடங்கி தற்போது வரை ஒருமுறைக்கூட இந்தியா டாஸை வெல்லவில்லை. இப்பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்து அணி (11 போட்டிகளுடன்) உள்ளது. Stay tuned with Way2News for INDvsPAK match updates.
Similar News
News February 23, 2025
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நடிகை

ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நடிகை சோனியா மான் இணைந்துள்ளார். மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா உள்ளிட்ட பலரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர், விவசாய அமைப்புத் தலைவர்களில் ஒருவரான பல்தேவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News February 23, 2025
கொடிய நோய்க்கு டாடா சொன்ன நாள் இன்று

இரு தலைமுறைகளுக்கு முன்புவரை வீட்டிற்கு ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு கைகளோ அல்லது கால்களோ செயல்படாமல் இருக்கும். போலியோ என்ற பெயர் கொண்ட இந்த நோய்க்கு முதல் தடுப்பூசி 1954ஆம் ஆண்டு இதே நாளில் போடப்பட்டது. அதன்பின், படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று போலியோ இல்லாத நாடாக இந்தியா முன்னேறியிருக்கிறது. நீங்களும் தவறாமல் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடுங்க.
News February 23, 2025
போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவாசத் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக ரோம் ஹாஸ்பிடலில் அண்மையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு போப்புக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில், உடல்நிலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.