News March 28, 2024
அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் வழக்கு நியாயமாக நடைபெறும். இந்தியாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும். இந்திய நீதித்துறையின் செயல்பாடுகளில் அமெரிக்க சந்தேகம் கற்பிப்பது தேவையற்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
6 ஓவர்களில் 148 ரன்களை விளாசிய ஆப்கானிஸ்தான்!

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
News November 7, 2025
இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?
News November 7, 2025
நடிகர் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ED சம்மன்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி ED அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும் வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி ED அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


