News April 26, 2024
அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

மனித உரிமை மீறல் தொடர்பான அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் அறிக்கையில், மணிப்பூரில் கொலைகளும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளதாகவும், பிற பகுதிகளில் செய்தியாளர்கள், சிறுபான்மையினர் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது, புரிதலின்றி வெளியிடப்பட்ட அறிக்கை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.
Similar News
News January 24, 2026
468 நாட்களுக்கு பிறகு சூரியகுமார் அரைசதம்

T20 இந்திய அணி கேப்டன் சூரியகுமார், நியூசிலாந்து எதிரான 2-வது T20 போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகித்தார். இந்த போட்டியில், 23 இன்னிங்ஸ்களுக்கு (468 நாட்கள்) பிறகு அரைசதம் விளாசினார். அதுவும், வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். T20 உலகக் கோப்பைக்கு பின்னர் அவரது ஃபார்ம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும், சந்தேகங்களும் நேற்றைய போட்டியில் பதிலளித்தார்.
News January 24, 2026
ருக்மணிக்கு திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி

புகைப்படக் கலைஞர் சித்தாந்த் நாக் உடன் ருக்மணி இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதன்பின் SM-ல், நீண்டநாள் காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், இதற்கு ருக்மணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், இப்போது திருமணம் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
News January 24, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


