News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.
Similar News
News March 5, 2026
படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 5, 2026
BREAKING: பள்ளிகளில் தடை.. தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து TN அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிவினைகளை தூண்டும் நிகழ்ச்சி, கல்வி நோக்கத்திற்கு தொடர்பில்லாத நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 5, 2026
வானதி சீனிவாசனுக்கு சீட் மறுக்கப்படுகிறதா?

பாஜகவில் சிட்டிங் MLA உள்பட முக்கியமான சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளைஞர்கள் & புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


