News September 2, 2025

10 வாரங்களில் கதையை மாற்றிய இந்தியா!

image

கடந்த ஜூன் 26-ம் தேதி சீனாவில் நடைபெற்ற SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் ராஜ்நாத் சிங்கும் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், இன்று அதே SCO மாநாட்டு பிரகடனத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானும் கையெழுத்திட்டிருந்தது. இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Similar News

News September 2, 2025

ராகுல் பொறுப்பற்றவர்: பாஜக MP சாடல்

image

வாக்கு திருட்டு என்ற அணுகுண்டுக்கு பிறகு ஹைட்ரஜன் குண்டு வரப்போவதாக பாஜக, தேர்தல் கமிஷனை கடுமையாக சாடியிருந்தார் ராகுல் காந்தி. இந்நிலையில், ராகுல் பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக MP ரவிசங்கர் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ராகுல் கூறிய அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 2, 2025

தோனிக்கு Away போட்டிகளே கிடையாது: ரவி பிஷ்னோய்

image

IPL தொடரில் தோனிக்கு Away போட்டிகள் என்பதே கிடையாது என்று ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், எந்த மைதானமாக இருந்தாலும் களத்திற்குள் வந்தாலே ‘தோனி தோனி’ என அனைவரும் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுகின்றனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும், தன் மீதான சந்தேகங்களை தவறு என தொடர்ந்து அவர் நிரூபிப்பதாலேயே இன்னும் அவர் விளையாடி வருகிறார் என்றார். தோனி என்றதும் நினைவுக்கு வருவது என்ன?

News September 2, 2025

விஜய் சேதுபதிக்கான கதையில் நடிக்கும் சூரி?

image

சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

error: Content is protected !!