News May 27, 2024
I.N.D.I.A ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது

மக்களவைத் தேர்தலுக்கான, 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, அன்றைய தினம் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜூன் 1ஆம் தேதி தங்கள் மாநிலத்தில் 10 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளதாலும், புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும், அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது எனக் கூறினார்.
Similar News
News March 23, 2026
இந்த தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறாரா விஜய்?

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடவுள்ள நிலையில், முதல் கட்டமாக 100 வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக, விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மார்ச் 25 அல்லது 26-ம் தேதியில் பெரம்பூரில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக பனையூர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News March 23, 2026
புதுச்சேரியில் காங்., தனித்து போட்டி.. அரசியல் பரபரப்பு!

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி என அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சங்கர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஆனாலும், தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், கூட்டணி முறிந்துவிட்டதாக சங்கர் பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.