News October 6, 2025
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

ஆஸ்திரேலியா A-வுக்கு எதிரான 3-வது அன் அபிசியல் ODI-ல் இந்தியா A, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பூரில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸி., 49.1 ஓவர்களில் 316 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணியில் பிரப்சிம்ரன் சிங் சதம், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரியான் பராக் அரைசதங்கள் விளாசி வெற்றிக்கு உதவினர். இதனால், 2-1 என்ற கணக்கில் இந்தியா A தொடரை கைப்பற்றியது.
Similar News
News October 6, 2025
ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம்

ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவை அவர் கரம் பிடித்துள்ளார். இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக அவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Congrats Liam..
News October 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 480 ▶குறள்: உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். ▶பொருள்: பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
News October 6, 2025
கரூர் துயரத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு பங்கு: பிரேமலதா

கரூர் விஷயத்தில் விஜய்யை பக்கா பிளான், ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள் என்று பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசியிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி எனவும் அவர் சாடியுள்ளார். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.