News December 18, 2024
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி டிரா

BGT தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா மோசமாக விளையாடி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்ய, 275 என்ற இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது.
Similar News
News September 2, 2025
விமர்சனம் கழுத்தை துண்டிக்க கூடாது: மிஷ்கின் வருத்தம்

திரை விமர்சனம் என்பது ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிப்பது போல் இருக்கக்கூடாது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். சினிமா விமர்சனங்கள் படங்களின் வியாபாரத்தை கெடுப்பதால், தயாரிப்பாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் மிஷ்கின் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும், விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 446 ▶குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ▶ பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
News September 2, 2025
இந்தியா வந்ததும் PM போட்ட போன் கால்

பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஜப்பான், சீனா சென்றுவிட்டு தாயகம் திரும்பிய PM மோடி, பஞ்சாப் CM பகவந்த் மான் சிங் உடன் தொலைபேசியில் நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ள பாதிப்புகள், நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.