News December 14, 2024
இந்தியா, ஆஸி 3ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் நேரலையாக கண்டு ரசிக்கலாம். ஏற்கெனவே நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளன. அதனால் 3ஆவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 7, 2026
முசுமுசுக்கை கீரையின் நன்மைகள்

முசுமுசுக்கை கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கும், மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கும் முசுமுசுக்கை சூப் சிறந்த மருந்தாகும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வாய் கசப்பை போக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதன் இலையை அரைத்து சாறு எடுத்து தோசை மாவில் கலந்து ஊற்றிச் சாப்பிடலாம்.
News March 7, 2026
விஜய்யும், கூட்டணி லாஜிக்கும்.. திருமா ரியாக்ஷன்

விஜய் கட்சி தொடங்கும் முன்பே, மெகா கூட்டணியை திமுக உருவாக்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் மீது உள்ள பயத்தின் காரணமாகவே, திமுக அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளதாக கூறுபவர்கள் தான் பதற்றத்திலும், பயத்திலும் உள்ளதாக அவர் பேசியுள்ளார். மேலும், விஜய் வந்த பின், திமுக கூட்டணி உருவானது எனக் கூறுவது அரசியல் அறியாமை, உளறல்; அதில் எந்த பொருளும் இல்லை எனக் கூறினார்.
News March 7, 2026
மார்ச் 7: வரலாற்றில் இன்று

*1919 – நடிகர் நம்பியார் பிறந்தநாள் *1945 – பாடகர் சங்கரநாராயணன் பிறந்தநாள் *1949 – அரசியல்வாதி குலாம் நபி ஆசாத் பிறந்தநாள் *1952 – VIV ரிச்சர்ட்ஸ் பிறந்தநாள் *1960 – இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்தநாள் *2006 – வாரணாசியில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொலை *2014 – நகைச்சுவை நடிகர் பாலாஜி மறைந்த நாள் *2020 – அரசியல்வாதி க.அன்பழகன் மறைந்த நாள்


