News March 29, 2024

பீகாரில் I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடு

image

பீகாரில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐஎம்எல் 3 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2026

த்ரிஷா போனில் விஜய்யின்.. VIRAL

image

விவாகரத்து வழக்கிற்கு இடையே விஜய் – த்ரிஷா தொடர்பான பழைய தகவல்கள் வைரலாகின்றன. அந்தவகையில், த்ரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று டிரெண்டாகிறது. அதில், விஜய்யின் பெயரை தனது போனில் ‘V’ என்று save செய்து வைத்துள்ளதாகவும், கில்லி பட சமயத்தில் விஜய்யை ‘சீட்டா’ என்று அனைவரும் செல்லமாக அழைத்ததாக த்ரிஷா கூறியுள்ளார். ஏனெனில், அவர் சீட்டா ஜாக்கெட் அணிந்திருந்தால் அப்படி கூப்பிட்டார்களாம்.

News April 3, 2026

ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும் அதிசயம் இம்முறை நடக்குமா?

image

ஒருசில தொகுதிகளுக்கு தனி வரலாறே இருக்கிறது. அதன்படி, சோழவந்தான், ஸ்ரீபெரும்புதூர், வேடசந்தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் கட்சி அல்லது கூட்டணி கட்சியே ஆட்சியை பிடித்துள்ளனவாம். வேடசந்தூர், ஸ்ரீபெரும்புதூரில் 1957 முதலும், சோழவந்தான், ராமநாதபுரத்தில் 1977 முதலும் இதே போக்கு பிரதிபலிக்கின்றன. இதனால், இத்தொகுதிகள் மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறதாம். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

வீட்டு சிலிண்டரில் மாற்றம்.. புதிய அறிவிப்பு

image

வீட்டு கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ஏப்.1 முதல் சில மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி,
*நகர்ப்புறங்களில் 25 நாள்களிலும், கிராமப்புறங்களில் 45 நாள்களிலும் அடுத்த சிலிண்டரை புக் செய்யலாம்.
*ஆதார் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
*LPG-யிலிருந்து குழாய் வழி கேஸ் இணைப்பான PNG-க்கு மாறுபவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!