News October 25, 2024

156 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

image

NZ-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 156 ரன்களுக்கு IND ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜடேஜா 38, ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் 30 ரன்களை எடுத்தனர். NZ பவுலர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய அணி 103 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 1-0 என NZ முன்னிலையில் உள்ளது. 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் IND உள்ளது.

Similar News

News December 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

News December 7, 2025

ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

image

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News December 7, 2025

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.

error: Content is protected !!