News October 19, 2024
இந்தியா ஏ அணி பேட்டிங்

எம்ர்ஜிங் ஆசிய கோப்பை: பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது. இதில், குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ள IND A – PAK A அணிகள் இன்று மோதுகின்றன. IND அணி தற்போதுவரை 4.3 ஓவர்களுக்கு 42/0 ரன்கள் எடுத்துள்ளது. PAKஐ இந்தியா வீழ்த்துமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 9, 2025
திமுகவில் இணைந்தவுடன் அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு

சமீபத்தில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பை ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆம்! திமுகவின் இலக்கிய அணி தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு 2026 தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 9, 2025
திருமாவளவன் காணாமல் போவார்: EPS

<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.