News April 6, 2024
முக்கிய புள்ளிகளின் வெற்றியை பாதிக்கும் சுயேட்சைகள்?

சுயேட்சை வேட்பாளர்கள் சில சமயங்களில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் தோற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமாவளவன் என்ற சுயேட்சை 289 வாக்குகள் பெற்றிருந்தார். இதேபோல இந்த தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து 6 பன்னீர்செல்வங்களும், ஜோதிமணியை எதிர்த்து 2 ஜோதிமணிகளும், ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து 6 சண்முகங்களும் களம் இறங்கியுள்ளனர்.
Similar News
News January 2, 2026
ஜனநாயகன் vs பராசக்தி: முந்துவது யார்?

ஜனநாயகன், பராசக்தி இரு படங்களில் எந்த படம் வெற்றிக் கொடியை நாட்டும் என்ற கேள்விதான் தற்போது ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவை பொறுத்தவரை தற்போது ஜனநாயகனே சற்று முந்தி இருக்கிறது எனலாம். விஜய் படத்திற்கு தமிழகத்தில் 500- 550 தியேட்டர்களும், SK படத்துக்கு 400- 450 வரை தியேட்டர்களும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க இதில் எந்த படத்துக்கு வெயிட்டிங்?
News January 2, 2026
செங்கோட்டையன் சம்பவம்.. EPS நெக்ஸ்ட் மூவ்

அதிமுகவில் எதிர்பார்த்த சில முக்கிய புள்ளிகள் <<18737961>>விருப்ப மனு<<>> அளிக்கவில்லை என்ற தகவல் EPS-ஐ அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். கூட்டணி வலிமை பெறட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்ற நினைப்பில் உள்ள அந்த புள்ளிகளை, தவெகவில் இணைக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாகவும் அதிமுக தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாம். இதனால், இந்த புள்ளிகளை கண்காணிக்க மூத்த தலைவர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளாராம்.
News January 2, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் <<18728682>>பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி<<>> ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் கசிந்துள்ளது. 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹3,000 வழங்க அரசுக்கு சுமார் ₹6,500 கோடி தேவை. ஏற்கெனவே மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகைக்கு ₹1,300 கோடி செலவாகிறது. இதனால், மேலும் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அரசு நீண்ட யோசனையில் உள்ளதாம். உங்கள் கருத்து?


