News August 5, 2024

நிதிஷ் கட்சியில் ஐக்கியமான சுயேச்சை எம்.எல்.ஏ

image

ஜார்க்கண்ட் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ சர்யு ராய், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதி எம்.எல்.ஏவான அவர், மாநில ஜேடியு கட்சியின் மாநிலத் தலைவர் சஞ்சய் குமார் ஜா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் திடீரென நிதிஷ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 18, 2026

யாருடன் கூட்டணி? மீண்டும் பிரேமலதா ஆலோசனை!

image

திமுக, அதிமுக, தவெக என 3 வாய்ப்புகள் இருப்பதால் எந்த பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் பிரேமலதா யோசனையில் உள்ளார். அதனால் தான் கடந்த 9-ம் தேதி கூட்டணி முடிவை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

News January 18, 2026

கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகாமல் இருக்க…

image

*பர்னர் சுத்தமா இருக்கணும். அழுக்கு இருந்தால், நெருப்பு அதிகமாக தேவைப்படும் *தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தும் போது, நெருப்பு சமமாக பரவி சீக்கிரமாக சமையல் ஆகும் *அரிசி, பருப்பு, சுண்டல், மொச்சை போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வேகும் *பாத்திரத்தை கழுவிய உடனே ஈரத்துடன் அடுப்பில் வைக்க வேண்டாம். அதே போல, fridgeல் இருந்து எடுத்தவுடன் காய்கறிகளை அடுப்பில் போட வேண்டாம்

News January 18, 2026

விடுபட்டவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு ₹3,000

image

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாத குடும்பங்கள் நாளை(ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைகளில் ஜன.14-ம் தேதி வரை 2.15 கோடி குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசை பெற்றுக் கொண்டனர். விடுபட்ட 7 லட்சம் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கம், பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு வழங்கப்படவுள்ளன. SHARE IT.

error: Content is protected !!