News April 29, 2025

IND மகளிர் அணிக்கு அபராதம் விதிப்பு

image

IND, SL, RSA பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. RSA-க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, ஏப்.27-ல் நடைபெற்ற SL-க்கு எதிரான ஆட்டத்தின்போது வெற்றி பெற்ற IND அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 30, 2025

முன்னாள் பாக். MP இந்தியாவில் இருக்க அனுமதி

image

ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் முன்னாள் பாக். MP தபயா ராம், இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 6 பேருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் மத அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக, அவர் கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார்.

News April 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 322 ▶குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ▶பொருள்: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.

News April 30, 2025

சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

image

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.

error: Content is protected !!