News October 10, 2025
IND Vs WI: இந்தியாவின் பிளேயிங் XI இதுதான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில், பிளேயிங் XI எந்த மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளேயிங் XI: *கில் *கே.எல்.ராகுல் *ஜெய்ஸ்வால் *சாய் சுதர்சன் *துருவ் ஜுரெல் *ரவீந்திர ஜடேஜா *வாசிங்டன் சுந்தர் *நிதிஷ்குமார் ரெட்டி *குல்தீப் யாதவ் *ஜஸ்பிரித் பும்ரா *முகமது சிராஜ். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Similar News
News October 10, 2025
பழங்களை தேர்வு செய்து எப்படி?

பழங்களை சரியாக தேர்வு செய்வது உடல்நலத்திற்கு முக்கியம். நன்றாக பழுத்த பழங்கள் சுவை மற்றும் செரிமானத்திற்கு சிறந்தவை. இவற்றைத் தேர்வு செய்வது எப்படி என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று நீங்களும் தேர்வு செய்து சாப்பிடுங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா, கீழே கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
கரூர் துயரத்திற்கு போலீஸ் தடியடியும் காரணம்: மனுதாரர்

கரூரில் நெரிசல் ஏற்பட காவல்துறை தடியடி நடத்தியதும் காரணம் என SC-ல், கூட்டத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வழக்கை CBI-க்கு மாற்றக்கோரி அவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, கூட்ட நெரிசல் ஏற்படும் என ADMK-வுக்கு தர மறுத்த இடத்தை TVK-க்கு காவல்துறை ஒதுக்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், SIT விசாரணையில் உண்மை வெளிவராது எனவும் குற்றம்சாட்டினார்.
News October 10, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

<<17964410>>காலையில் இன்ப அதிர்ச்சி<<>> கொடுத்த தங்கம் விலை, மதியம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்திருந்தது. ஆனால், காலையில் இருந்த விலையைவிட, இப்போது ₹640 அதிகரித்துள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,340-க்கும், ₹1 சவரன் ₹90,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது நடுத்தர மக்களுக்கு கவலையளித்துள்ளது.