News September 30, 2025
IND vs WI: மற்றொரு வெஸ்ட் இன்டீஸ் வீரர் விலகல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இன்டீஸ் அணி, அக்.2-ல் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார். முதுகில் காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையிலும், மருத்துவ அறிக்கையில் காயத்தின் தாக்கம் உள்ளதாக இருந்ததால் அவர் விலகியுள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக ஷமார் ஜோசப்பும் விலகினார்.
Similar News
News September 30, 2025
சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
News September 30, 2025
ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசு சரிந்து ₹88.79ஆக உள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். இதனால், சமையல் எண்ணெய், பருப்பு, எரிவாயு உள்ளிட்டவற்றிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
News September 30, 2025
பழியை துடைக்கும் பாசிச திமுக: நயினார் நாகேந்திரன்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களை திசைதிருப்புவதற்கு உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பழியை துடைக்க பாசிச திமுக அரசு வழக்கு பதிவதாகவும், CBI விசாரணை தேவை எனவும் நயினார் கோரியுள்ளார்.