News June 16, 2024

IND vs SA: முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

image

3 ஒரு நாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், பெங்களூருவில் இன்று மதியம் 1.30 மணிக்கு IND vs SA இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. 20 ஓவர் போட்டிகளுக்கு தயாராகும் வகையில், இந்த போட்டிகளை பயன்படுத்தி கொள்வோம் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே சென்றது?

image

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.

News March 2, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

image

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 2, 2026

திமுகவின் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ?

image

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!