News December 10, 2025
IND vs SA முதல் T20: வரிசைக்கட்டிய ரெக்கார்டுகள்!

☆சர்வதேச T20-ல் குறைந்த வயதில் 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை திலக் வர்மா(23 வயது 31 நாள்கள்) பெற்றுள்ளார் ☆சர்வதேச T20-ல் 100 சிக்ஸர்களை அடித்த 4-வது இந்தியராகியுள்ளார் ஹர்திக்(100 சிக்ஸர்கள்). ரோஹித்(205), SKY(155), கோலி(124) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர் ☆சர்வதேச T20-ல் SA-ன் குறைவான ஸ்கோர் இது(74 ரன்கள்). 2022-ல் IND-க்கு எதிராக 87 ரன்களில் சுருண்டதே முந்தைய மோசமான ஸ்கோர்.
Similar News
News December 10, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <
News December 10, 2025
காங்., அமமுக விருப்ப மனுக்கள் விநியோகம்

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அமமுக & காங்., கட்சிகள், இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். அமமுகவில் தமிழகத்தில் போட்டியிட ₹10,000, புதுச்சேரிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். காங்.,கில் கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருப்பமுடையவர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.
News December 10, 2025
எந்த ஷா வந்தாலும் முடியாது: மு.க.ஸ்டாலின் சவால்

தேனாம்பேட்டையில் நடந்த ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களை X பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘எந்த ஷா வந்தாலென்ன, எத்தனை திட்டம் போட்டாலென்ன. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்’ என்று சூளுரைத்துள்ளார்.


