News September 14, 2025

IND vs PAK: அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா?

image

பும்ரா, அக்‌ஷர், வருண், குல்தீப் ஆகிய மெயின் பவுலர்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-ல் உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பாக்.,க்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உள்ள பிளேயிங் 11-ல் எந்த மாற்றமும் இல்லை என்று துணை கோச் ரயான் டென் டெஸ்கொத்தே கூறியுள்ளார். எனவே காயமடைந்துள்ள கில்லும் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Similar News

News September 14, 2025

காதல் திருமணம்: மனம்விட்டு பேசிய உதயநிதி

image

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய DCM உதயநிதி, தானும் காதல் திருமணம் செய்தவர்தான் எனவும், அதற்கு எவ்வளவு தடங்கல்கள் வரும் என தனக்கு தெரியும் என்றும் கலகலப்பாக பேசினார். பிறகு, பெரும்பாலான காதல் ஜோடிகளை சேர்த்துவைப்பதால், இது அறநிலையத்துறையா? அன்புநிலையத்துறையா? என நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.

News September 14, 2025

பசுவை காப்பவர்களுக்கு Vote பண்ணுங்க: சங்கராச்சாரியார்

image

பிஹாரின் 243 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்த போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பசு வதையை பாவமாக கருதும், இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாஜக, பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக மோடி கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என சாடினார்.

News September 14, 2025

பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறையா?

image

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதம் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவு கொடுத்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இம்முறையும் அப்படி செய்தால் பள்ளி மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்கவுள்ளது.

error: Content is protected !!