News February 17, 2025
IND vs PAK – ஓவர் ஹைப்: ஹர்பஜன் சிங்

நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய ஹைப் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி தான். ஆனால், இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும் போது, ‘இது ஓவர் ஹைப்’ எனவும், ICC போட்டிகளில் 2 அணிகளின் Statisticsஐ பார்த்தால், அது புரியும் என்றும் விளக்கமளித்துள்ளார். இந்தியா வலுவான அணி என்றும், பாகிஸ்தான் Inconsistent ஆக இருப்பதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். யார் ஜெயிக்க போறாங்க?
Similar News
News November 19, 2025
பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு

பிஹாரின் அடுத்த CM ஆக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NDA கூட்டணி கட்சி MLA-க்களின் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வான நிலையில், நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் விழாவில் CM ஆக பதவியேற்கிறார். இந்நிகழ்வில் PM மோடி, பாஜக முதல்வர்கள், MP-க்கள், MLA-க்கள் பங்கேற்கவுள்ளனர்.
News November 19, 2025
இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் : PM மோடி

இயற்கை விவசாயத்தின் பாதையில் இந்தியா பயணித்தே ஆக வேண்டும் என்று PM மோடி வலியுறுத்தியுள்ளார். ரசாயனம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட PM மோடி, அதை சரிசெய்வதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், வேளாண் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைத்திருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 19, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.10 – 23- வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 – ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் <<18304177>>தேர்வு<<>> <<18304103>>அட்டவணைகள்<<>> ஏற்கெனவே <<18304206>>வெளியாகியுள்ளது<<>> குறிப்பிடத்தக்கது.


