News November 30, 2024
இன்று Ind vs Pak மேட்ச்: வைபவ் சூர்யவன்ஷி அசத்துவாரா?

UAE’யில் நேற்று தொடங்கிய, U-19 ஆசிய கோப்பையில் இன்று காலை 10:30 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகளும் மோதும் போட்டியை Sony Liv OTT நேரலை செய்கிறது. IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்த 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதே இப்போட்டி கவனம் பெற முக்கிய காரணமாகும். ஏலத்தில் உண்டான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா வைபவ்?
Similar News
News December 8, 2025
விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

அதிமுக Ex அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டிற்கு ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
வருகிறது ஜியோ ஏர்லைன்ஸ்.. ஒரு வருஷம் ஃப்ரீயாம்!

விரைவில் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கவுள்ளதாம். ஜியோ சிம்மை போல, இதில் முதல் வருடம் பயணம் இலவசமாம். நம்ப முடியவில்லையா! இதுகுறித்து போஸ்டர்களும் வைரலாகியுள்ளது. ஆனால், நீங்க நம்பவே வேண்டாம். ரிலையன்ஸ் இப்படியான ஒரு அறிவிப்பை தரவே இல்லை. நெட்டிசன்களாக இப்படி ஒரு கற்பனையை சோஷியல் மீடியாவில் உலாவவிட்டுள்ளனர். உண்மையில் ஜியோ ஏர்லைன்ஸ் வந்து, ஒரு வருடம் ஃப்ரீ என்றால்..
News December 8, 2025
வரலாறு படைத்த விராட் கோலி!

ODI-ல் இந்தியாவுக்காக ஒரே ஆண்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் கோலி உச்சம் தொட்டுள்ளார். அவர் 2010, 2011, 2012, 2013, 2014, 2016, 2017, 2018, 2025 என 9 முறை ரன் மெஷினாக செயல்பட்டுள்ளார். 2025-ல் 4 அரைசதங்கள், 3 சதங்கள் உள்பட 651 ரன்களை அவர் குவித்துள்ளார். இந்த பட்டியலில் அடுத்த இடங்களில் சச்சின், டிராவிட், ரோஹித் (தலா 3 முறை) உள்ளனர். இந்த வித்தியாசமே கோலி ஏன் கிங் என்பதை கூறுகிறது.


