News December 5, 2024
IND vs PAK: ஐசிசி கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இன்று மாலை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை, வரும் 7ஆம் தேதிக்கு ICC ஒத்திவைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் சூழலில், அந்நாட்டிற்கு தங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது. IND அணியின் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் வெளிநாடுகளில் நடத்துவதற்கும் பாக்., நிபந்தனைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
டிகிரி வேண்டாம்.. Zoho-ல் வேலை உண்டு: ஸ்ரீதர் வேம்பு

US-ல் திறமையான பள்ளி மாணவர்களுக்கு, பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி எனவும், டிகிரியை காட்டிலும் திறமைக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர டிகிரி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, கமெண்ட் பண்ணுங்க.
News December 4, 2025
ஏன் Su-57 போர் விமானம்?

அண்டைய நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்தியா ராணுவ தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தியா வரும் புடினுடன் Su-57 போர் விமானம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று ரஷ்யா செவ்வாயன்று உறுதிப்படுத்தி இருந்தது. ஏன் Su-57, இதனால் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும் உள்ளிட்ட தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News December 4, 2025
சற்றுமுன்: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

பள்ளிக் கல்வியின் செயல்திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்யும் நோக்கில், இனி மாதந்தோறும் (5-ம் தேதிகளில்) அலுவல் கூட்டம் நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (டிச.5) அலுவல் ஆய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலை, பள்ளி ஆண்டாய்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


