News October 19, 2025
IND Vs ENG: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும். ஒருவேளை தோற்றால், நியூசிலாந்து உடனான அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.
Similar News
News April 7, 2026
TN தேர்தல் கருத்துகணிப்பு.. ஸ்டாலின், விஜய் அதிர்ச்சி!

‘Vote Tracker’ என்ற பெயரில் CNN News18 நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும், வாக்கு சதவீதம், ஸ்டாலின், EPS, விஜய், சீமான் இவர்களில் நீங்கள் விரும்பும் முதல்வர் யார்? என்ற கேள்விகளுக்கு மக்கள் அளித்த ஆதரவு உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
News April 7, 2026
திருமாவை பார்த்தால் பாவமா இருக்கு: அண்ணாமலை

திருமாவளவனை மிரட்டி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியிலும் 3 <<19572042>>விசிக<<>> வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமா கேட்டுக் கொண்டதை குறிப்பிட்ட அண்ணாமலை, அவரை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு திமுக மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News April 7, 2026
தென்தமிழகத்தில் விஜய் முதல் பிரசாரம்

நெல்லை கேடிசி நகர் பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்தபடியே பரப்புரை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பரப்புரையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிக்கவுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, முதல்முறையாக தென்தமிழகத்தில் விஜய் பிரசாரம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


